வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 26 ஏப்ரல் 2021 (10:37 IST)

இந்திய நடிகர் இர்ஃபான் கானுக்கு ஆஸ்கர் விழாவில் அஞ்சலி!

கடந்த ஆண்டு புற்றுநோயால் உயிரிழந்த பிரபல இந்திய நடிகர் இர்ஃபான் கானுக்கு ஆஸ்கர் விழாவில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புள்ள காரணத்தால் பிரம்மாண்டமாக நடைபெறும் பிரபலமான ஆஸ்கர் விருது வழங்கும் விழா இந்த முறை கூட்டம் அதிகமின்றில் அலட்டல் இல்லாமல் நடந்து வருகிறது.

சிறந்த இசை, படம், இயக்குனர், நடிகர் என பல்வேறு பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகள் வழங்கும் முன்பாக விழா தொடக்கத்தில் கடந்த ஆண்டு உயிரிழந்த முக்கியமான நடிகர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதில் இந்திய நடிகர் இர்ஃபான் கானுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்திய படங்களில் மட்டுமல்லாது லைப் ஆப் பை, ஸ்பைடர்மேன், ஜுராசிக் வேர்ல்ட் போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்து பிரபலமான இர்ஃபான் கான் கடந்த ஆண்டு புற்றுநோயால் உயிரிழந்தார். இவரை தவிர்த்து இந்திய ஆடை வடிவமைப்பாளரான மற்றுமொரு இந்திய பெண் பானு அதயாவிற்கு ஆஸ்கர் விழாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.