1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : புதன், 18 ஜூலை 2018 (17:59 IST)

தோனி 2: படமாகும் மீத கதை!

இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகியது. M.S.Dhoni: The untold story என்ற தலைப்பில் உருவான இந்த படத்தை நீரஜ் பாண்டே இயக்கினார்.  
 
தோனி கதாபாத்திரத்தில் சுஷாந்த் சிங்கும், சாக்‌ஷி வேடத்தில் கியாரா அத்வானியும் நடித்தனர். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை சுற்றி நகர்ந்தாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் காட்டியது. 
 
இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. படத்தின் முன் தயாரிப்பு பணியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். 
 
2011 ஆம் ஆண்டுக்கு பின் (இந்திய அணி உலககோப்பையை வென்ற பின்னர்) தோனி வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் என தெரிகிறது.