திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : வியாழன், 12 ஜூலை 2018 (12:17 IST)

காலா வில்லன் படத்தின் திரைக்கதை எழுத்தாளர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை

பாலிவுட் திரைக்கதை எழுத்தாளர் ரவிசங்கர் அலோக் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
காலா படத்தில் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலா படத்திற்கு முன் அப் டக் ச்ஹப்பான் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்திற்கு திரைக்கதை எழுதியவர் ரவிசங்கர் அலோக்.
 
இவர் நேற்று மதியம் மும்பை வெர்ஸோனாவில் அவரது வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டார். அவர் குடியிருப்பு பகுதி வாட்ச்மேன் கூறியதாவது:-
 
சமீபத்தில்தான் அவரது பெற்றோர்கள் பாட்னா சென்றனர். கட்டிடத்தின் மாடி எப்போது பூட்டிதான் இருக்கும். ரவிசங்கர் எப்படி மாடிக்கும் சென்றார் என்று தெரியவில்லை. 
 
தற்கொலை குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை என்று வெர்ஸோனா காவல்துறை தெரிவித்துள்ளது. இவரது தற்கொலை சம்பவம் பாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.