1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sasikala
Last Modified: வியாழன், 23 ஜூன் 2016 (15:08 IST)

இலியானாவுக்கு இன்னொரு வாய்ப்பு

இலியானாவுக்கு இன்னொரு வாய்ப்பு

இந்திக்கு சென்ற இலியானாவுக்கு ஆரம்பத்தில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன. அதன் பிறகு ஆறு மாதத்துக்கு ஒன்று என சுருங்கிப் போனது. 


 
 
கிட்டத்தட்ட ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்துள்ள ரஸ்டம் திரைப்படம் வெளியாக உள்ளது. 
 
இலியானா, ஈஷா குப்தா, அக்ஷய் குமார் நடித்துள்ளனர். மிலன் லூத்ரா படத்தை இயக்கியுள்ளார். பீரியட் த்ரில்லராக இது உருவாகியுள்ளது. 
 
இதனைத் தொடர்ந்து மீண்டும் ஒரு சரித்திரப் படத்தை இயக்குகிறார் மிலன். இதிலும் இலியானா, ஈஷா குப்தாதான் நாயகிகள். ஆக, ஒரு படத்தில் நடித்து இன்னொரு வாய்ப்பையும் போனசாக பெற்றிருக்கிறார் இலியானா. ஆனால், இந்தப் படம் எத்தனை வருடங்கள் கழித்து வெளியாகும் என்பதுதான் தெரியவில்லை.