வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 25 ஆகஸ்ட் 2021 (12:25 IST)

அபிஷேக் பச்சனுக்கு விபத்து: பதறிப்போய் மருத்துவமனைக்கு விரைந்த ஐஸ்வர்யா ராய்!

உலக அழகியும் பிரபல இந்தி நடிகையுமான ஐஸ்வர்யா ராய் இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். மணிரத்னத்தின் இருவர் படத்தில் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான ஐஸ்வர்யா ராய் பின்னர் ஜீன்ஸ், எந்திரன் உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார்.
 
தற்போது மீண்டும் மணிரத்னத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். அதே போல் அவரது கணவர் அபிஷேக் பச்சனும் பார்த்திபன் இயக்கிய ஒத்த செருப்பு இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார். 
 
அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக  பொன்னியின் செல்வன் ஷட்டிங்கில் இருந்த ஐஸ்வர்யா ராய்க்கு செய்தி வந்துள்ளது. பதறிப்போன அவர் இருந்தும் படப்பிடிப்பை பாதியில் நிறுத்தாமல் இருந்து சீக்கிரமாக முடித்துக்கொடுத்துவிட்டு கணவரை பார்க்க சென்றாராம். அபிஷேக் பச்சனுக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டிருப்பதாக வெளிவந்த தகவல்கள் கூறுகிறது.