வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Siva
Last Modified: ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2024 (10:58 IST)

ரஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: எரிமலை வெடித்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக எரிமலை வெடித்ததாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்யாவின் கிழக்கு கம்சட்கா  கடற்கரையில் இன்று சக்திவாய்ந்த  பூகம்பம் நிகழ்ந்ததாகவும் இந்த பூகம்பம் 7.0  என்று ரிக்டர் அளவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 
 
பூமிக்கு 50 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாக கூறப்படும் இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை பொருள் சேதம், உயிர் சேதம் குறித்து தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் கட்டடங்கள் சில பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் கம்சட்கா  என்ற பகுதியில் லட்சக்கணக்கில் பொதுமக்கள் வசிக்கும் கடற்கரை நகரத்தில் இருந்து 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எரிமலை வெடித்துள்ளதாகவும், இது நிலநடுக்கத்தால் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக கம்சட்கா  பகுதி மக்கள் அச்சத்தில் மூழ்கி இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Siva