வெள்ளி, 27 பிப்ரவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 22 மே 2017 (21:37 IST)

பாகுபலி சாதனையை முறியடிக்க சீனா சென்ற அமீர்கான்

பாகுபலி சாதனையை முறியடிக்க சீனா சென்ற அமீர்கான்
பாகுபலி 2 திரைப்படம் இந்திய சினிமா வரலாற்றில் வசூல் சாதனை படைத்துள்ளது. இதை முறியடிக்க தற்போது தங்கல் திரைப்படம் சீனாவில் வெளியாகி வசூலை குவித்து வருகிறது.


 

 
பாகுபலி திரைப்படம் அண்மையில் வெளியாகி வசூலில் ரூ.1500 கோடியை கடந்தது. இதுவரை அதிக வசூல் செய்த பட்டியலில் தங்கள் திரைப்படம் இருந்தது. இந்த தங்கல் திரைப்படம் ரூ.800 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் தற்போது தங்கல் திரைப்படம் சீன மொழியில் டப் செய்யப்பட்டு கடந்த வாரம் ரிலீஸ் செய்யப்பட்டது. சீன மக்கள் தங்கல் படத்தை கொண்டாடி வருகின்றனர். இதனால் அங்கும் தங்கல் வசூல் அள்ளி வருகிறது. 
 
மேலும் தங்கல் திரைப்படமும் இப்போது 1000 கோடி வசூல் செய்த பட்டியலில் பாகுபலியுடன் இணைந்தது. தற்போது தங்கல் திரைப்படம் 1300 கோடி வசூலை நெருங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.