வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Modified: புதன், 31 அக்டோபர் 2018 (20:55 IST)

நவம்பர் மாத ராசிபலன்கள் - துலாம்

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)


அடுத்தவரை அனுசரித்து செல்வதில் கெட்டிக்காரர்களான துலா ராசியினரே! இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரன் ஆட்சியாக இருப்பதால் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். பணம் சார்ந்த விஷயங்களில் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. எதிர்பாராத சில சம்பவங்கள் நடக்கலாம். அதனால் உங்களுக்கு நன்மையும் உண்டாகலாம். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும்.

பணவரத்து கூடும்.  எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக் கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும்  சாமர்த்தியம் உண்டாகும். வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும்.  வேளை தவறி உண்ண வேண்டி இருக்கும். வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரம்  எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். பணி நிமித்தமாக பயணம் செல்ல வேண்டி வரலாம்.

குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம்  கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அக்கம்பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது.

பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

அரசியல்துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும். எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். பதவிகள் சம்பந்தமான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மாணவர்களுக்கு  கல்வி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

சித்திரை 3, 4 பாதம்:
உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே செய்த வேலைகளுக்கு இப்போது பாராட்டும் பண உதவியும் கிடைக்க பெறலாம். குடும்பத்தில் இருந்த டென்ஷன் குறைந்து சந்தோஷமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே  மகிழ்ச்சியான உறவு நிலவும். பிள்ளைகளின் நடத்தை மனதுக்கு  நிம்மதியை தரும்.

சுவாதி:
எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும். டென்ஷன் குறையும். மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் பற்றி இருந்த டென்ஷன் நீங்கும். புதிய நட்புகள் மூலம் உதவி கிடைக்கும்.

விசாகம் 1, 2, 3ம்  பாதம்:
நல்ல பலன்கள் உண்டு. திறமையான பேச்சின் மூலம் காரியங்களை சாதிப்பீர்கள். எதிர்த்து செயல்பட்டவர்கள்  விலகிச் சென்று விடுவார்கள். தெய்வ பிரார்த்தனை மனதுக்கு நிம்மதியையும், ஆறுதலையும் தரும். பணவரத்து கூடும். அரசாங்க காரியங்கள் சாதகமாக பலன்  தரும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமியை வழிபட்டு வர பொன்பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய், வியாழன்;  தேய்பிறை: செவ்வாய், வியாழன்;
சந்திராஷ்டம தினங்கள்: 23, 24
அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7, 8