1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 30 ஜூலை 2020 (19:17 IST)

ஆகஸ்ட் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: தனுசு

தனுசு (மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்)

 
கிரகநிலை:
ராசியில்  கேது, குரு (வ), சனி (வ) - பஞ்சம ஸ்தானத்தில்  செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில்  ராஹு, சுக்ரன்  - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில்  புதன், சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
 
கிரகமாற்றம்:
17-08-2020 அன்று காலை 5.01 மணிக்கு சூர்ய பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
30-08-2020 அன்று காலை 3.59 மணிக்கு புதன் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
31-08-2020 அன்று இரவு 9.34 மணிக்கு சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
01-09-2020 அன்று பகல் 2.16 மணிக்கு ராகு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கும், கேது பகவான் விரைய ஸ்தானத்திற்கும், மாறுகிறார். 
17-09-2020 அன்று காலை 5.41 மணிக்கு சூர்ய பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    
 
பலன்:
தனக்கு கிடைத்திருக்கும் தெய்வீக அருளை அனைவருக்கும் தர விருப்பப்படும் தனுசு ராசியினரே நீங்கள் இறை நம்பிக்கை அதிகம் உடையவர்கள். இந்த மாதம்  கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிக்கும் சூழ்நிலை உண்டாகும். சுக்கிரன் சஞ்சாரம் பணவரத்தைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவுகள் உண்டாகும். சூரியன் சஞ்சாரத்தால் எதிர்ப்புகள் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும். நீண்ட தூர பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
 
தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாக நிதிநிலை உயரும். கடன் பிரச்சனைகள் குறையும். தொழில் போட்டிகள் விலகும். வேலை தேடுபவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகமான எதிர்ப்புகள் விலகும்.
 
குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். குதூகலம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். தொல்லைகள் நீங்கும்.
 
பெண்களுக்கு எதையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். பயணங்கள் வெற்றியை தரும்.
 
கலைட்துறையினருக்கு யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. மனக்கவலை உண்டாகும். 
 
அரசியல்துறையினருக்கு வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. உடல் சோர்வு உண்டாகலாம். வீண் அலைச்சலை தவிர்த்து எடுத்து கொண்ட காரியங்களில் கவனம் செலுத்துவது நல்லது. 
 
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றிக்கு கூடுதல் முயற்சி பலன் அளிக்கும்.
 
மூலம்:
இந்த மாதம் எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.  மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் மிகவும் நன்கு கவனித்து பாடங்களை படிப்பது நல்லது. சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். 
 
பூராடம்:
இந்த மாதம் மனஅமைதி உண்டாகும். எதிலும் நற்பலன் கிடைக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதிலும், உறுதியான முடிவு எடுப்பீர்கள். வாக்கு வன்மையால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படலாம். 
 
உத்திராடம்:
இந்த மாதம் கடவுள் பக்தி  அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல்,  சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு  அனுப்பும் போது கவனம் தேவை. 
 
பரிகாரம்: நவக்கிரஹ குருவை வியாழக்கிழமைகளில் வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கி சுகம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்; 
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 17, 18; செப்டம்பர் 14, 15
அதிர்ஷ்ட தினங்கள்:  செப்டம்பர் 6, 7, 8