புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Modified: சனி, 1 ஏப்ரல் 2023 (09:13 IST)

ஏப்ரல் 2023 மாத ஜோதிடப் பலன்கள்: மீனம்

Monthly Astro Image
ஏப்ரல் 2023 மாத ஜோதிடப் பலன்கள்: மீனம்

கிரகநிலை:

ராசியில் குரு, சூர்யன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - சுகஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரகநிலை அமைந்திருக்கிறது.

கிரகமாற்றங்கள்:

07-04-2023 அன்று சுக்ர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய,  வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

14-04-2023 அன்று சூரிய பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

22-04-2023 அன்று குரு பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
பலன்:

எந்த ஒரு பிரச்சனைகளையும் சமாதானமாக பேசி  முடிக்கும் சாமர்த்தியம் மிகுந்த மீனராசியினரே நீங்கள் அனுபவஅறிவு மிக்கவர்.

இந்த மாதம் உங்களுக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகத்தை தருவதுடன் உடல் ஆரோக்கியத்தையும், மன வலிமையையும் தரும். இதுவரை உங்கள் மனதை வாட்டி வந்த சிக்கல்கள் தீரும்.  நீண்ட நாட்களாக இருந்து வந்த குறைகள் ஒவ்வொன்றாக மாறும். ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்திற்குண்டான பாதைகளை வகுப்பீர்கள். அதே வேளையில் தெய்வ அனுகூலமும் உங்களுக்கு உண்டு. பொருளாதார வளம் சிறப்படையும். காரிய அனுகூலங்களும் உண்டு. செய்யும் முயற்சிகளில் தடை வந்தாலும் அதனை முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு உண்டு என்பதை உணருங்கள். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் உடனே நிறைவேறாமல் போகலாம். எனினும் முயற்சிகளை தொடர்ந்து செய்வது நல்லது.

உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். உங்கள் உழைப்புக்குத் தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். உடன்பணிபுரிவோரால் அனுசரனைகள் உண்டு. உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம். எந்த வேலையையும் நேரம் தவறாமல் செய்யவும். தள்ளிப் போடுதலும் கூடாது.

தொழில் செய்பவர்கள் பின் தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பர். பணவரவு அதிகரிக்கும். தோயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். புதிய தொழில் தொடங்குவத்ற்குண்டான ஆர்வம் பிறக்கும். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம்.

அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். பிள்ளைகளிடம் அன்பு, பாசம் காட்டுவது நல்லது.

கலைத்துறையினர் சீரான நிலையில் இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகம் இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம்.

அரசியல்வாதிகளுக்கு மாதமுற்பகுதி பாடுபட வேண்டியிருந்தாலும், பிற்பாதி மிகவும் நன்றாக இருக்கும்.

மாணவமணிகள் தீவிர முயற்சி எடுத்துபடிப்பது அவசியமாகும்.உடல்நலனைப் பொறுத்தவரை வயிறு உபாதைகள் வந்து வந்து மறையும்.

பூரட்டாதி 4ம் பாதம்:

இந்த மாதம் விரும்பியது கிடைக்க கூடுதல் முயற்சி தேவை. சந்திரன் சஞ்சாரத்தால் பணவரத்து அதிகரிக்கும். பயணம் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்கள் நட்பு உண்டாகும். வாகன மூலம் லாபம் வரும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

உத்திரட்டாதி:

இந்த மாதம் பல விதத்திலும் புகழ் கூடும். மற்றவர்கள் பிரச்சனைகளில் வாதாடி வெற்றி பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த  போட்டிகள் விலகும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் விரிவாக்கம் செய்ய தேவையான பண உதவியும் கிடைக்க  பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். மேல் அதிகாரிகள் உதவி கிடைக்கும்.  சக ஊழியர் மத்தியில் இருந்து எதிர்ப்புகள் விலகும்.

ரேவதி:

இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வருகை இருக்கும். திருமணம்  போன்ற சுப காரியம் நடக்கும். நிலம், வீடு மூலம் லாபம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுவையான உணவு கிடைக்கும். மனோ பலம் கூடும்.

பரிகாரம்: நவகிரகத்தில் குருவுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட செல்வம் சேரும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வியாழன் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 7, 8
அதிர்ஷ்ட தினங்கள்: 1, 27, 28, 29