வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Modified: சனி, 1 ஏப்ரல் 2023 (09:08 IST)

ஏப்ரல் 2023 மாத ஜோதிடப் பலன்கள்: கும்பம்

Monthly Astro Image
ஏப்ரல் 2023 மாத ஜோதிடப் பலன்கள்: கும்பம்

கிரகநிலை:

ராசியில் சனி - தனவாக்கு ஸ்தானத்தில் குரு, சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது.

கிரகமாற்றங்கள்:

07-04-2023 அன்று சுக்ர பகவான் தைரிய,  வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

14-04-2023 அன்று சூரிய பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய,  வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

22-04-2023 அன்று குரு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய,  வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

பலன்:

ஒரு பார்வையிலேயே மற்றவரை எடைபோடும் திறமை உள்ள கும்பராசியினரே, நீங்கள் எடுத்த காரியத்தில் எந்த தடை வந்தாலும் பின்வாங்க மாட்டீர்கள்.

இந்த மாதம் உங்களுக்கு முன்னேற்றங்களை தரும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நல்ல பொருளாதாரம் வளமும் மேன்மையும் உண்டு. நன்மைகள் அதிகம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.  எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும்.

குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். தமப்திகளிடையே அன்பு மேலோங்கும். மனைவி வழியில் அவ்வப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு, மோதல்கள் அடியோடு மறையும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். நல்ல வரன் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும். வீடு மனை விஷயத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். புதிய சொத்து வாங்கலாம்.

தொழில் சிறக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். விருந்து விழாவிற்காக செலவுகள் செய்வீர்கள்.  வாகன பிராப்தி உண்டு. வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கும் போது கவனம் தேவை. உத்தியோகம் பார்ப்பவர்கள் உன்னத நிலையை அடையலாம். பதவி உயர்வு, சம்பள் உயர்வு போன்றவை இருக்கும்.

கலைஞர்களுக்கு தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். புகழ் பாராட்டு வந்து சேரும்.

அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். மாணவர்கள் நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவீர். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். உடல்நலத்தைப் பொறுத்தவரை சிறப்படையும். மனதில் இருந்து வந்த இனம்புரியாத வேதனை மறையும். பிள்ளைகளின் உடல்நலத்தில் சீரான முன்னேற்றம் இருக்கும்.

அவிட்டம் 3, 4 பாதம்:

இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டும். ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும். பணவரத்து இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய பதவிகள் தொடர்பான விஷயங்கள் தாமதப்பட்டாலும் பொறுப்புகள் அதிகரிக்கும்.

சதயம்:

இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். வாழ்க்கை துணையின் உடல் நலனில்  அக்கறை தேவை. சிறிய விஷயங்களுக்கு கூட கோபம் வரலாம். அதனால் உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக  பேசுவது நல்லது. விபரீத ஆசைகள் ஏற்படலாம். கவனம் தேவை.

பூரட்டாதி 1, 2, 3  பாதம்:

இந்த மாதம் பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்களில் சாதகமான பலன் பெறுவீர்கள். உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. உங்கள் பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது.

பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவது காரிய தடைகளை போக்கும். நன்மை கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 5, 6
அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26