ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. க‌ட்டுரைக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 27 நவம்பர் 2024 (10:26 IST)

2025ம் ஆண்டில் வீடு கிரஹப்பிரவேசத்திற்கான நல்ல நாட்கள் எது?

Grahapravesh days 2025
2025ம் ஆண்டு பலருக்கும் சிறப்பு வாய்ந்த வருடமாக மலர உள்ளது. வரும் புது வருடத்திலே பல ராசிக்காரர்களுக்கும் வீடுகள் வாங்கவும், கட்டவும் வாய்ப்புகள் உள்ளது. இந்த ஆண்டில் இழுபறியாக இருந்து வரும் வீட்டு கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டில் வெற்றிகரமாக முடியும்.

2025ம் ஆண்டில் வீடு கிரஹப்பிரவேசத்திற்கான சிறப்பான முகூர்த்த நாட்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
  • 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கிரஹப்பிரவேசத்திற்கு அம்சமான முகூர்த்த நாட்கள் இல்லை.
  • பிப்ரவரி கிரஹப்பிரவேச முகூர்த்த நாட்கள்: பிப்ரவரி 2025ல் வரும் 06, 07, 08, 14, 15, 17 ஆகிய 6 நாட்கள் கிரஹப்பிரவேசத்திற்கு நல்ல நாட்களாகும்
  • மார்ச் கிரஹப்பிரவேச முகூர்த்த நாட்கள்: மார்ச் 2025ல் வரும் 01, 05, 06, 14, 17 மற்றும் 24 ஆகிய 5 நாட்கள் கிரஹப்பிரவேசத்திற்கு நல்ல நாட்களாகும்
  • ஏப்ரல் மாதத்தில் 30ம் தேதி மட்டும் கிரஹப்பிரவேச சுபதினமாக அமைகிறது.
  • மே கிரஹப்பிரவேச முகூர்த்த நாட்கள்: மே 2025ல் வரும் 07, 08, 09, 10, 14, 17, 22, 23 மற்றும் 28 ஆகிய 9 நாட்கள் கிரஹப்பிரவேசத்திற்கு நல்ல நாட்களாகும்
  • ஜூன் மாதத்தில் 06ம் தேதி கிரஹப்பிரவேச சுபமுகூர்த்தமாக அமைகிறது.
  • ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் வீடு புகுவதற்கு ஏற்ற சுப முகூர்த்தம் இல்லை.
  • அக்டோபரில் 24ம் தேதி கிரஹப்பிரவேச சுபமுகூர்த்த நாளாக உள்ளது.
  • நவம்பர் கிரஹப்பிரவேச முகூர்த்த நாட்கள்: நவம்பர் 2025ல் வரும் 03, 07, 14, 15, 24 ஆகிய 5 நாட்கள் கிரஹப்பிரவேசத்திற்கு நல்ல நாட்களாகும்
  • டிசம்பர் மாதத்தில் கிரஹப்பிரவேசத்திற்கான அம்சமான முகூர்த்த நாட்கள் இல்லை.
 
Edit by Prasanth.K