திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 6 ஜூன் 2024 (06:01 IST)

இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும்! - இன்றைய ராசி பலன் (06.06.2024)!

astro
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


 
மேஷம்
இன்று நிர்பந்தத்தின் பேரில் மனதுக்கு பிடிக்காத வேலை செய்ய வேண்டி இருக்கலாம். தொழில் வியாபாரத்தில் விழிப்புடன் இருப்பது  நன்மைதரும். எதிர்காலம் பற்றிய சிந்தனையும் மனக்கவலையும் ஏற்படும். ஆனால் சூரியன் அதனுடன் சேர்க்கை பெற்ற புதன் உங்களது மனக் கவலையை போக்குவார்கள். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாகனங்கள் மூலம் லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

ரிஷபம்
இன்று அரசாங்க தொடர்புடைய முக்கிய நபர்களின் அறிமுகம் அவர்களால் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் உண்டாகலாம். உங்கள் பேச்சை சரியாக புரிந்து கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. ஆன்மிக பணிகளில் கவனம் செல்லும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

மிதுனம்
இன்று புதிய காரியங்களில் ஈடுபடுவதை தள்ளிபோடுவது நல்லது. பணவரத்து தாமதப்படலாம். எந்த வாக்குறுதியும் அளிக்காமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உயர்வு பெற தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். எதையும் ஒரு முறைக்கு இருமுறை நன்கு யோசித்து செய்வது வெற்றியை தரும். வீண் செலவை குறைப்பது நல்லது. அடுத்தவருக்கு உதவி செய்யப் போய் அதனால் அவச் சொல் உண்டாகலாம் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கடகம்
இன்று தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளை கவனமுடன் செய்வது நல்லது. பயன்தராத முயற்சிகளை கைவிடுவது நன்மை தரும். வீண் அலைச்சல் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் கொடுத்த பணியினை முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவர் செய்கை கோபத்தை தூண்டுவதாக இருக்கும். கவனம் தேவை. குடும்பம் தொடர்பான காரியங்களை பொறுப்பாக செய்வது நல்லது. அடுத்தவரை நம்பி எதையும் விடாமல் நேரடியாக செய்வது நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

சிம்மம்
இன்று மருத்துவ செலவு ஏற்படக்கூடும். வீடு, பூமி மூலம் வரவேண்டிய வருமானம் தாமதப்படலாம். வாழ்க்கை துணையுடன் விவாதம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலையும் காரிய தாமதத்தையும் சந்திக்க வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

கன்னி
இன்று தொழில் வியாபார போட்டிகள் குறையும். பணவரத்து இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். உறவினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின்போது கவனம் தேவை. அடுத்தவர்களுக்காக பொறுப்புகளை ஏற்கும்போது ஒரு முறைக்கு பலமுறை யோசித்து முடிவு எடுப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

துலாம்
இன்று பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய நபர்களிடம் எச்சரிக்கை தேவை. பெரியோர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உண்டாகும். துணிச்சலுடன் எந்த காரியத்திலும் ஈடுபட்டு சாதகமாக செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

விருச்சிகம்
இன்று தொழில் வியாபாரம் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் வியாபார விரிவாக்கம் கைகூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வருமானம் அதிகம் கிடைக்க பெறுவீர்கள். வராது என்று எண்ணியபணம் வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

தனுசு
இன்று கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். வாழ்க்கை துணையினால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். சகோதர வழியில் வேண்டிய உதவி கிடைக்கும். பிள்ளைகள் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். மன தைரியம் கூடும். துணிச்சலுடன் எந்த காரியத்திலும் ஈடுபட்டு சாதகமாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

மகரம்
இன்று உடல் ஆரோக்கியம் அடையும். சமூகத்தில் மரியாதை உயரும். பணவரத்து பலவழிகளில் இருக்கும் அதே நேரத்தில் செலவும் வரும். வாக்கு வன்மையால் புகழ் கூடும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன் வசூலாகும். புதிய நபர்களை நம்பி எதையும் செய்யும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பிரவுண்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

கும்பம்
இன்று எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டு பயணம் திட்டமிட்டபடி அமையும். அரசாங்கம் தொடர்பான வேலைகள் தடையின்றி நடக்கும். குடும்பத்தில் திடீர் மகிழ்ச்சி உண்டாகும். கணவன், மனைவிக்கி டையே ஒற்றுமை காணப்படும். உறவினர்களுடன் சுமூகமான போக்கு காணப்படும். அவர்களால் நன்மையும் உண்டாகும். நீண்ட தூர தகவல்கள் நல்ல தகவல் தரும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 7

மீனம்
இன்று உங்களது செயல்களை மற்றவர்கள் பாராட்டுவார்கள். மரியாதையும் அந்தஸ்தும் அதிகரிக்கும். புதிய நபர்களிடம் கவனம் தேவை. வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். சிற்றின்பம் கிடைக்கும். மனதில் தைரியமும் புதிய உற்சாகமும் உண்டாகும். புதிய முயற்சிகளில் இழுபறியான நிலை காணப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9