1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 7 பிப்ரவரி 2025 (06:01 IST)

இந்த ராசிக்காரர்களுக்கு தடைப்பட்ட சுபகாரியங்கள் நடக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (07.02.2025)!

astro
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

மேஷம்:
இன்று நல்ல பலன்கள் கிட்டும். புதிய சொத்துகள் சேரும். வெற்றிகளை சுவைக்கலாம். மனை, மனைவி வாய்க்கும் பொன்னான காலம் இது. லாபங்கள் பெருகும். தடைபட்ட சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும். புதிய கடன்கள் இனி ஏற்படாது. இருக்கும் கடன் சுமையும் குறையும். வெளிநாடு செல்லும் திட்டம் வெற்றி பெறும். உத்யோகஸ்தர்களுக்கு பதவி, சம்பளம் உயரும். நீங்கள் விரும்பிய இடமாறுதலும் கிடைக்கப்  பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

ரிஷபம்:
இன்று கடன்களின் சுமை எதுவும் இல்லாமல் சுபகாரியங்கள் நிறைவேறும். காத்திருக்கும் பெண்கள் வேலை வாய்ப்பையும் நல்ல கணவனையும் ஒருசேரப் பெறுவர். நோய்களின் தாக்கம் குறையும். வாகனங்கள் நினைத்தபடி ஒத்துழைக்கும். சுற்றமும் உறவும் அலுவலகமும் ஒருசேர நன்மையாகவே இயங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மிதுனம்:
இன்று ஏதாவது காரியமாக வேண்டுமென்றால் உங்கள் காலை பிடிப்பதும் கையைப் பிடிப்பதுமாக இருந்தவர்களை எல்லாம் ஒதுக்கித் தள்ளுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். திடீர் பயணங்கள், செலவுகள் அதிகரிக்கும். வற்றிய பணப்பை நிரம்பும். விலகிச் சென்ற பழைய சொந்த பந்தங்கள் இனி வீடு தேடி வருவார்கள். நண்பர்களின் ஒத்துழைப்பும் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

கடகம்:
இன்று புதிய முயற்சிகளைத் தொடங்கலாம். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். முயற்சிகளில் நல்ல பலன்கள் கிடைக்கும்.  கல்வித்துறையில் இருப்பவர்களுக்கு கௌரவம் கிடைக்கும். பொருளாதாரத்தில் சிறப்பு உண்டாகும். தொழிலாளர்கள் சற்று கவனத்துடன் பணியாற்றுவது அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

சிம்மம்:
இன்று நோய் விலகும். முதுகுவலி,  கால்வலி என முடங்கிய நீங்கள், இனி முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் குடி கொள்ளும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்பார்கள். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். புண்ணிய நதிகளில் நீராடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

கன்னி:
இன்று உல்லாசப் பயணங்களின் போது கவனம் தேவை. நண்பர்களினால் தொல்லைகள் தானாக விலகும். கண்கள் உபத்திரவம் ஏற்படாமல் இருக்க கவனம் தேவை. உஷ்ணத்தை உடம்பில் தங்க விடக் கூடாது. பொதுவில் நீங்கள் உங்கள் கடமைகளைச் சரிவர செய்தால் நன்மைகள் அதிகமாக கிடைக்கும். 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

துலாம்:
இன்று புதிய முயற்சிகளைத் தொடங்கலாம். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். முயற்சிகளில் நல்ல பலன்கள் கிடைக்கும். கல்வித்துறையில் இருப்பவர்களுக்கு கௌரவம் கிடைக்கும். பொருளாதாரத்தில் சிறப்பு உண்டாகும். தொழிலாளர்கள் சற்று கவனத்துடன் பணியாற்றுவது அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

விருச்சிகம்:
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சரளமான பண வரவால் சந்தோஷம் அடைவீர்கள். நம்பிக்கையுடன் உங்கள் பணிகளில் ஈடுபடுவீர்கள். நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து மன நிறைவு அடைவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும். புதிய முதலீடுகளில் தைரியத்துடன் ஈடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 6

தனுசு:
இன்று குடும்பத்தில் சில நேரங்களில் உங்கள் வார்த்தைகளால் பிரச்சனை வரலாம். எனவே பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள். யாருக்காவது ஏதேனும் வாக்குறுதிகள் கொடுத்திருந்தால் அவைகளை உடனடியாக நிறைவேற்றுங்கள். திருமணம் நல்ல வரனாக அமையும். வாழ்க்கைத்துணை வழியில் இருந்து உதவிகள் கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

மகரம்:
இன்று குடும்பத்தில் பிரச்சனைகள் இருந்தாலும் அமைதிக்கு குறைவு இருக்காது. சிலர் வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி வரலாம். மகான்களின் ஆசியும், ஆசீர்வாதமும் உங்களுக்கு பரிபூரணமாகக் கிடைக்கும். உங்கள் கடன் தொல்லை கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். பயணம் செய்யும் போது உங்களது உடமைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6

கும்பம்:
இன்று தேவையில்லாதவர்களை எல்லாம் ஒதுக்கித் தள்ளுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். திடீர் பயணங்கள், செலவுகள் அதிகரிக்கும். கல்யாணம், கிரகப் பிரவேசம், சீமந்தம் என வீடே சுப நிகழ்ச்சிகளால் களைகட்டும். வற்றிய பணப்பை நிரம்பும். விலகிச் சென்ற பழைய சொந்த பந்தங்கள் இனி வீடு தேடி வருவார்கள். நண்பர்களின் ஒத்துழைப்பும் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9   

மீனம்:
இன்று விலகியிருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். தடைபட்ட கல்யாணம் முடியும். நவீனரக வாகனம் வாங்குவீர்கள். வங்கிக் கடனுக்காக காத்திருந்து, பாதியில் நின்று போன வீடு கட்டும் பணி இனிதே தொடர்ந்து நடைபெறும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5