1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நிகழ்வுகள் 2022
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 22 டிசம்பர் 2022 (13:20 IST)

இவங்கதான் இந்த ஆண்டின் டாப் 10 பணக்காரர்கள்! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Cover
2022ம் ஆண்டு முடிவடையும் நிலையில் இந்த ஆண்டின் டாப் பணக்காரர்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் கொரோனாவால் பாதித்திருந்த மக்களும், பொருளாதாரமும் இந்த ஆண்டு நன்கு முன்னேறியுள்ளது. பொருளாதார நெருக்கடிகளை தாண்டி பல நிறுவனங்கள் தீவிர முயற்சியின் பேரில் தங்கள் வெற்றி இலக்கை அடைந்துள்ளன. இந்த ஆண்டில் அதிகம் வருமானம் ஈட்டிய டாப் 10 பணக்காரர்கள் பட்டியல் இதோ..!

10. ஸ்டீவ் பால்மர்
Steve Palmer

அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரான ஸ்டீவ் பால்மர் 2000 முதல் 2014 வரை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சிஇஓ-வாக பணியாற்றியவர். பின்னர் அங்கிருந்து விலகியவர் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வந்தார். அமெரிக்காவில் பிரபலமான லாஸ் எஞ்சல்ஸ் க்ளிப்பர்ஸ் என்ற கூடைப்பந்து அணியின் உரிமையாளராகவும் ஸ்டீவ் பால்மர் உள்ளார். இவரது ஆண்டு சொத்து மதிப்பு 79.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள்

9. கார்லோஸ் ஸ்லிம் ஹெலு
கார்லோஸ் ஸ்லிம் ஹெலு

மெக்சிகோவை சேர்ந்த கார்லோஸ் தொழிலதிபர் மட்டுமல்ல, அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு நல உதவிகளையும் செய்து வருபவர். இவரது நிறுவனங்களான காங்லோமெரெட் மற்றும் க்ரூபோ கார்சோ ஆகியவை மெக்சிகோவின் கல்வி, விளையாட்டு, வணிகம், மருத்துவம், ஊடகம், ரியல் எஸ்டேட் என அனைத்து துறைகளிலும் தங்கள் முதலீடுகளை கொண்டுள்ளது.

மெக்சிகோ பங்குசந்தையின் 40 சதவீதத்தை கைக்குள் வைத்திருக்கும் கார்லோஸ் தி நியூயார்க் டைம்ஸ் கம்பெனியின் பிரதான பங்குதாரராகவும் உள்ளார். இவரது இந்த ஆண்டு சொத்து மதிப்பு 81 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

8. முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி

உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த இரண்டாவது இந்தியர் முகேஷ் அம்பானி. இவரது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் கிளை நிறுவனங்கள் உலகம் முழுவதும் கிளை பரப்பி வளர்ந்துள்ளன. ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் இரண்டாவது இடத்தில் உள்ள முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 91 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

7. லாரி எல்லிசன்
லாரி எல்லிசன்

அமெரிக்காவை சேர்ந்த லாரி எல்லிசன் வெறும் தொழிலதிபர் மட்டுமல்ல. நிஜமாகவே ஒரு பெரிய தீவுக்கு சொந்தக்காரர். ஹவாய் தீவு கூட்டங்களிலேயே ஆறாவது பெரிய தீவான லனாய் (பைனாப்பிள் தீவு) தீவின் 98% உரிமையை தன்னகத்தே வைத்துள்ளார் எல்லிசன்.

எல்லிசன் முன்னதாக பிரபல அமெரிக்க கணினி தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள் நிறுவனத்தின் துணை நிறுவனராகவும், சிஇஓவாகவும் இருந்தவர். இவரது மொத்த சொத்து மதிப்பு 102 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

6. வாரன் பஃபெட்
வாரன் பஃபெட்

இவர் உலக பணக்காரர் மட்டுமல்ல, முதலீட்டாளர்களுக்கு ஒரு நடமாடும் காட்ஃபாதர். தற்போதைய உலகில் வெற்றிகரமாக பல முதலீடுகளை செய்து நம்பர் 1 முதலீட்டாளராக இருப்பவர் வாரன் பஃபெட். பெர்க்‌ஷாயர் ஹத்தவே நிறுவனத்தின் சேர்மேனாகவும், சிஇஓவாகவும் வாரன் பஃபெட் உள்ளார்.

ஏழை நாடுகள் மற்றும் மக்களுக்கு உதவுவதற்கான அமைப்புகளையும் ஏற்படுத்தி தனது லாபத்திலிருந்து ஏராளமான பணத்தை மக்கள் நல வளர்ச்சிக்காகவும் செலவிட்டு வருகிறார் பஃபெட்

5. பில் கேட்ஸ்
பில் கேட்ஸ்

உலக பணக்காரர்கள் பட்டியல் என்றாலே ஒரு காலத்தில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து பலரையும் வியக்க வைத்தவர் பில் கேட்ஸ். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரான பில்கேட்ஸ் 2014ம் ஆண்டு வரை மைக்ரோசாப்ட்டின் அதிகபட்ச பங்குகளை கையில் வைத்திருந்த பிரதான பங்குதாரராக இருந்தார்.

சமீப காலமாக தொழிலை விட மக்கள் நலனில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார் பில்கேட்ஸ். இதற்காக கேட்ஸ் பவுண்டேசனை தொடங்கிய பில்கேட்ஸ் பல நாட்டு மக்களுக்கும் அந்த அமைப்பு மூலம் சுகாதார, மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறார். ’தி கிவிங் ப்ளெட்ஜ்’ தொண்டு இயக்கத்தை வாரன் பஃபெட்டும், பில் கேட்ஸும்தான் இணைந்து தொடங்கினர். பில்கேட்ஸின் தற்போதைய சொத்து மதிப்பு 104.9 பில்லியன் டாலர்

4. ஜெப் பெசோஸ்
ஜெப் பெசோஸ்

உலக பிரபலமான அமேசான் நிறுவனத்தை தொடங்கிய ஜெப் பெசோஸ் இந்த ஆண்டின் உலக பணக்காரர்கள் வரிசையில் நான்காவது இடத்தில் உள்ளார். அமேசான் மட்டுமல்லாமல் ப்ளூ ஆரிஜின் என்ற விண்வெளி ஆய்வு நிறுவனம் மூலமாகவும் பல்வேறு வணிக விண்வெளி பயணங்களை மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறார் ஜெப் பெசோஸ். இவரது மொத்த சொத்து மதிப்பு 111.5 பில்லியன் டாலர்

3. கௌதம் அதானி
கௌதம் அதானி

உலக பணக்காரர்களில் மூன்றாவது இடத்தில் உள்ள கௌதம் அதானி இந்தியாவை சேர்ந்தவர். ஆசியாவின் பணக்காரர்களில் முதல் இடத்தில் உள்ளவர். இவரது அதான் குழுமத்தின் பல்வேறு நிறுவனங்கள் உலகம் முழுவதும் பல நாடுகளிலும் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் பல்வேறு துறைமுகங்களை மேம்படுத்துதல் மற்றும் இயக்குதலில் அதானி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதானி உருவாக்கிய அதானி பவுண்டேசன் மூலம் மக்களுக்கு உதவிகளையும் செய்து வருகிறார். இவரது சொத்த மதிப்பு 133.2 பில்லியன்

2. எலான் மஸ்க்
எலான் மஸ்க்

நிகழ்கால அயர்ன்மேன் என செல்லமாக அழைக்கப்படும் எலான் மஸ்க், டெஸ்லா கார் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வு மையம் உள்ளிட்ட பல நிறுவனங்களின் உரிமையாளராக உள்ளார். சமீபத்தில் ட்விட்டர் வலைதளத்தை வாங்கியது முதல் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானார். இவரது உலகளாவிய சொத்து மதிப்பு 174.8 பில்லியன் டாலர்
 
1. பெர்னார்ட் அர்னால்ட்
Bernard
உலக பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ளவர் பிரான்சை சேர்ந்த பெர்னார் அர்னால்ட். LVMH எனப்படும் Louis Vuitton Moet Henessy என்னும் நிறுவனத்தை நிறுவியவர் இவர். பிரான்சை தலைமையகமாக கொண்ட இந்நிறுவனம் உலகம் முழுவதும் ஆடம்பரமான அழகுசாதன பொருட்களை உற்பத்தி, விநியோகம் செய்து வருகிறது. இவரது உலகளாவிய சொத்து மதிப்பு 184.3 பில்லியன் டாலர்.

Edit By Prasanth.K