திங்கள், 5 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2021 கண்ணோட்டம்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 29 டிசம்பர் 2021 (13:48 IST)

டாப் 10 பிரபலமான தமிழ் அறிமுக கதாநாயகிகள் 2021

டாப் 10 பிரபலமான தமிழ் அறிமுக கதாநாயகிகள் 2021
டாப் 10 பிரபலமான தமிழ் அறிமுக கதாநாயகிகள் 2021 
 
10. சீலா ராஜ்குமார் - மண்டேலா
டாப் 10 பிரபலமான தமிழ் அறிமுக கதாநாயகிகள் 2021
தமிழ் நடிகை மற்றும் பரதநாட்டிய நடனக் கலைஞரான சீலா ராஜ்குமார்  2012 ஆம் ஆண்டில் திரைத்துறைக்கு அறிமுகமானார்.  திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்த இவர் குறிப்பாக அழகிய தமிழ் மகள் என்ற ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடரில் தனது முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். அரசியல் நையாண்டி தொலைக்காட்சித் திரைப்படமான மண்டேலா திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பேசும்படியாக அமைந்தது. 
 
9. திவ்யா பாரதி - பேச்சுலர் 
டாப் 10 பிரபலமான தமிழ் அறிமுக கதாநாயகிகள் 2021
மாடல் அழகியான திவ்யா பாரதி அறிமுகமான முதல் படத்திலேயே ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானார். 18+ அடல்ட் கன்டென்ட் கொண்ட பேச்சிலர் திரைப்படத்தில் அவரது நடிப்பு குறித்து சர்ச்சையாக பேசப்பட்டது. போல்டான நடிகையாக அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து இந்த வருடத்தின் தாப் 10 நடிகைகளில் 9வது இடத்தை பிடித்துள்ளார். 
 
8. நிதி அகர்வால் - ஈஸ்வரன்
டாப் 10 பிரபலமான தமிழ் அறிமுக கதாநாயகிகள் 2021
இந்தியத் திரைப்பட நடிகையான நிதி அகர்வால் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்திலே அளவில்லாமல் கவர்ச்சி காட்டி திக்குமுக்காட செய்துவிட்டார். தமிழில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்து கோலிவுட்டிற்கு நல்ல துவக்கத்தை கொடுத்துள்ளார். 
 
7.  பூஜா கண்ணன் - சித்திரை செவ்வானம்
டாப் 10 பிரபலமான தமிழ் அறிமுக கதாநாயகிகள் 2021
ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா தமிழ் சினிமாவில் இயக்குனராக அவதரித்து எடுத்துள்ள திரைப்படம் சித்திரை செவ்வானம். இப்படத்தில் சமுத்திரக்கனியின் மகளாக இளம் நடிகை பூஜா கண்ணன் நடித்து சினிமாவில் நடிகையாக அறிமுகமாகியிருக்கிறார்.  இவர் பிரபல நடிகை சாய் பல்லவியின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
6. கல்யாணி பிரியதர்ஷன் - மாநாடு 
டாப் 10 பிரபலமான தமிழ் அறிமுக கதாநாயகிகள் 2021
தென்னிந்திய திரைப்பட நடிகையான கல்யாணி பிரியதர்ஷன் 2017இல் வெளிவந்த "ஹலோ" தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுத்து தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் தொடர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். அதன் பிறகு தமிழில் சிம்புவின் மாநாடு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து கோலிவுட்டிற்கு அறிமுகமாகியிருக்கிறார். 
 
5. ரஜிஷா விஜயன் - கர்ணன் 
டாப் 10 பிரபலமான தமிழ் அறிமுக கதாநாயகிகள் 2021
மலையாளம், தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமான ரஜிஷா விஜயன் 2016 ஆம் ஆண்டு வெளியான அனுராகா கரிக்கின் வெள்ளம் என்ற மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் தனுஷின் கர்ணன் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமாகி நல்ல தொடக்கத்தை கொடுத்துள்ளார். 
 
4. பிரியங்கா மோகன் - டாக்டர்
டாப் 10 பிரபலமான தமிழ் அறிமுக கதாநாயகிகள் 2021
தமிழ் ரசிகர்களின் லேட்டஸ்ட் கிரஷ் லிஸ்டில் இடம் பிடித்திருப்பவர் நடிகை பிரியங்கா மோகன். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து பிரபலமானார். தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகியிருக்கிறார். தற்போது டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 
 
3. துஷாரா விஜயன் - சார்பட்டா பரம்பரை
டாப் 10 பிரபலமான தமிழ் அறிமுக கதாநாயகிகள் 2021
போதை ஏறி புத்தி மாறி படத்தில் நடித்தவர் நடிகை துஷாரா விஜயன். ஆனால் இவரை பிரபலமாக்கியது சார்ப்பட்டா பரம்பரை திரைப்படம் தான். ஆர்யாவின் மனைவியாக 80ஸ் காலத்து பொண்டாட்டியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் பச்சக் என்று பதிந்து விட்டார். 
 
 
2. ராஷ்மிகா மந்தனா - சுல்தான் 
டாப் 10 பிரபலமான தமிழ் அறிமுக கதாநாயகிகள் 2021
இந்தியத் திரைப்பட நடிகையான ரஷ்மிகா மந்தனா கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற இவர் தெலுங்கு சினிமாவின் டாப் நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார். தமிழில் கார்த்தியின் ஜோடியாக சுல்தான் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். 
 
1. மாளவிகா மோகனன் - மாஸ்டர் 
டாப் 10 பிரபலமான தமிழ் அறிமுக கதாநாயகிகள் 2021
இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ரசினிகாந்த் நடித்த பேட்ட திரைப்பட நடிகையான மாளவிகா மோகனன் பிரபல ஒளிப்பதிவாளர் கேயு மோகனனின் மகள். இவர் தமிழில் ரஜினியின் பேட்ட திரைப்படத்தில் சைடு ஆக்டராக நடித்து அறிமுகமானார். அடுத்தாக விஜய் நடித்த மாஸ்டர் திரைபடத்தில் கதாநாயகியாக நடித்து ஹீரோயினாக தடம் பதித்துள்ளார்.