வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2016 (17:22 IST)

பெண்களை கண்டாலே கத்தியால் குத்தும் வாலிபர்

பாகிஸ்தான் நாட்டில் வலிபர் ஒருவர் பெண்களை கண்டாலே கொலை வெறியுடன் கத்தியால் குத்தியுள்ளார். இதில் 17 பெண்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 

 
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் நகரைச் சேர்ந்த முகமது அலி(22) என்பவர், தனது சிறுவயதில் வளர்ப்பு தாயால் கொடுமை படுத்தப்பட்டு வந்துள்ளார். இதனால் மனநிலை பாதிக்கப்பட்ட அலி, எல்லா பெண்களையும் அவரின் இரண்டாவது தாய் போல் தான் இருப்பார்கள் என கருதி, தன் தெருவில் வரும் அனைத்து பெண்களையும் தாக்கியுள்ளார். 
 
முகமது அலி கடந்த ஜனவரி மாதம் முதல் பெண்களை தாக்கும் செயல்களில் ஈடுப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 17 பெண்கள் பலத்த காய்ங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் இருந்த ஒரு செவிலியரையும் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
 
இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.