புதன், 4 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (17:47 IST)

இரவு நேரத்தில் 7 பேரை விரட்டி விரட்டி கத்தியால் குத்திய இளைஞன்

லண்டனில் இரவு 10.00 மணி அளவில் ரூஸ்செல் சதுக்கம் பகுதியில் இளைஞன் ஒருவன் 7 பேரை துரத்தி கத்தியால் குத்தியுள்ளான்


 


லண்டனில் இரவு 10.00 மணி அளவில் ரூஸ்செல் சதுக்கம் பகுதியில் இளைஞன் ஒருவன் 7 பேரை துரத்தி கத்தியால் குத்தியுள்ளான்.
 
இச்செய்தி அறிந்து அறிந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து காயம் அடைந்த 7 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில் ஒரு பெண் உயிரிழந்தார். மற்ற 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இதையடுத்து காவல் துறையினர் அந்த மர்ம நபரை தேடிக் கொண்டிருந்தபோது, மருத்துவமனையிலே அந்த இளைஞன் கத்தியுடன் சுற்றி திரிந்துள்ளான். காவல்துறை அதிகாரி ஒருவர் அவனை துப்பாக்கியால் சுட்டு பிடித்தார். 
 
மேலும் காவல்துறையினர் அந்த நபரிடம் விசாரனை நடத்தி வருகின்றனர்.