Last Modified: வியாழன், 13 ஏப்ரல் 2017 (15:42 IST)
உடம்பில் சுற்றிய பாம்பு ; தப்பிக்க என்ன செய்கிறார் என பாருங்கள் : வைரல் வீடியோ
தன்னுடை உடம்பில் சுற்றிய பாம்பிடமிருந்து தப்பிக்க ஒரு வாலிபர் தரையில் உருண்டு புரண்ட சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது.
பாம்புகள் அதிகமாக வாழும் நாடு தாய்லாந்து. கடந்த 8ம் தேதி அங்குள்ள ஒரு பிரவுசிங் செண்டரில் ஒரு பாம்பு புகுந்து விட்டது. கதவை திறந்து வெளியே செல்ல முயன்ற ஒரு வாலிபரின் உடம்பில் ஒரு பாம்பு ஏறி விட்டது. சட்டென்று அதை உணர்ந்த வாலிபர், பாம்பு கடியிலிருந்து தப்பிக்க, உடனடியாக தரையில் விழுந்து புரண்டார். இதில் அந்த பாம்பு அவரது உடலை விட்டு வேறு இடத்திற்கு சென்று விட்டது.
மேலும், அங்கிருந்த சில வாலிபர்களும் அங்கும் இங்கும் ஓடினார்கள். இவை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ வெளியாகியுள்ளது.