செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Dinesh
Last Updated : திங்கள், 3 அக்டோபர் 2016 (18:32 IST)

இந்த ஆண்டின் மருத்துவ நோபல் பரிசு யாருக்கு தெரியுமா?

கடந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.


 


மலேரியா மற்றும் வெப்பமண்டல நோய்களுக்கு மேம்பட்ட சிகிச்சை முறைகளை கண்டுபிடித்தமைக்காக இந்த விருது வழங்கப்பட்டது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது.
 
மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு ஜப்பான் நாட்டின் டோக்கியோ தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் விஞ்ஞானி யோஷினோரி ஒஷுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தன்னைத்தானே சரிசெய்து மறுசுழற்சி செய்யும் உயிரியல் செல்களின் செயல்முறைகள் தொடர்பான கண்டுபிடிப்புக்காக அவருக்கு இந்த ஆண்டு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.