உலகின் மிகவும் ஆபத்தான சாலைகள் பலவற்றில் டாப் 5 இடத்தை பிடித்துள்ள சாலைகளின் தொகுப்பே இது.
ஓல்டு யங்காஸ் சாலை:
கடந்த 1995 ஆம் ஆண்டு பொலிவியாவின் லா பாஸ் நகரில் இருந்து கோரோய்கோ நகரை இணைக்கும் ஓல்டு யங்காஸ் சாலை உலகின் அபாயகரமான சாலை என்று அறிவிக்கப்பட்டது.
அட்லாண்டிக் சாலை:
நார்வேயில் உள்ள அட்லாண்டிக் சாலை ஐரோப்பிய கண்டத்தின் அபாயகரமான சாலை என்று கூறப்படுகிறது.
அட்லாண்டிக் கடலோரத்தில் உள்ள இந்த சாலையில் காற்று பலமாக வீசும்போது விபத்துகள் அதிகம் ஏற்படும்.
ஜேம்ஸ் டால்டன் நெடுஞ்சாலை:
அலாஸ்கா மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள ட்ரான்ஸ் அலாஸ்கா சாலை உலகின் தனிமைப்படுத்தப்பட்ட சாலை ஆகும்.
குளிர்காலங்களில் பனி அதிக அளவு காணப்படுவதால் இந்த சாலையில் எந்தவொரு வாகன ஓட்டியும் தனியாக செல்வதில்லை.
ட்ரான்ஸ் செர்பியன் நெடுஞ்சாலை:
சுமார் 10,094 கிமீ அதிகமான நீளம் கொண்ட இந்த சாலையில் மலைகள், அடர்ந்த வனப்பகுதிகள், பாலைவனங்கள் என நீளும் எனவே இது உலகின் அபாயகரமான சாலைகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
பான் அமெரிக்கன் நெடுஞ்சாலை:
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் தொடங்கி கனடா, மெக்சிகோ, கவுதமாலா, அர்ஜெண்டினா என மொத்தம் 14 நாடுகள் வழியாக இந்த பாதை பயணிக்கிறது.
காடுகள் மற்றும் பனிசூழ்ந்த மலைச்சிகரங்கள் என இந்த பாதை அபாயம் நிறைந்ததாக உள்ளது.