செவ்வாய், 11 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 26 மே 2025 (10:54 IST)

பெர்சனல் பொருட்கள் என பையை காட்ட மறுத்த இளம்பெண்.. வலுக்கட்டாயமாக திறந்து பார்த்த ரெயில்வே அதிகாரி அதிர்ச்சி..!

பெர்சனல் பொருட்கள் என பையை காட்ட மறுத்த இளம்பெண்.. வலுக்கட்டாயமாக திறந்து பார்த்த ரெயில்வே அதிகாரி அதிர்ச்சி..!
உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஜான்ஸி ரெயில் நிலையத்தில் சமீபத்தில் ஒரு பெண், அதிக எடை கொண்ட பையை சந்தேகத்திற்கு இணங்க கொண்டு செல்ல முயன்றபோது ரெயில்வே அதிகாரியிடம் பிடிபட்டார்.  என்னுடைய பெர்சனல் பொருட்தான் உள்ளது, அதில் காண்பிக்க எதுவும் இல்லை" என எளிதாக பதிலளித்தார்.
 
ஆனால், அவர் காட்டிய பதற்றமான நடத்தை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழும்ப செய்தது. பையை சோதனை செய்தபோது, அதில் கணிசமான அளவிலான கள்ளச்சாராயம் மறைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 
அவரை கைது செய்து, அரசுப் ரெயில்வே காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆரம்ப விசாரணையில், அவர் ஒரு கள்ளச்சாராயக் கடத்தல் கும்பலில் உறுப்பினராக இருப்பது தெரியவந்தது. மற்ற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த சாராயங்கள், ரெயில்வே மூலம் சட்டவிரோதமாக கடத்த இருந்ததாக  விசாரணையின் மூலம் தெரிய வந்தது.
 
இந்த கைது, இந்திய ரெயில்வேயில் நடைபெறும் கடத்தல்களை தடுக்கும் நோக்கில் செயல்படும் Operation Vigilant திட்டத்தின் கீழ் ஏற்பட்ட மற்றொரு முக்கிய வெற்றியாகும். 2024–25 நிதியாண்டில் இதுவரை 15 சாராய கடத்தல் வழக்குகள் கண்டறியப்பட்டு, 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
மேலும், ரூ.13.73 லட்சம் மதிப்புள்ள 136.017 கிலோ வெள்ளி, தங்கம் மற்றும் கணக்கில் காட்டப்படாத பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 
பிராந்திய ரெயில்வே மேலாளர் தீபக் குமார் சின்ஹா, "ரெயில்வே சட்டவிரோத செயல்களுக்கான வழியாக மாற முடியாது. கடுமையான சோதனைகளும் கண்காணிப்பும் நடைபெற்று வருகின்றன" என்று தெரிவித்தார்.
 
Edited by Mahendran