செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: சனி, 13 மே 2017 (05:32 IST)

நம் குழந்தைகள் ஏன் குப்பையை சாப்பிட வேண்டும்: டிரம்ப்பை வறுத்தெடுத்த மிச்சேல் ஒபாமா

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா, இதுவரை டிரம்ப் அரசை குறைகூறாமல் அமைதியாக இருந்தார். ஆனால் தற்போது முதல்முறையாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பை மறைமுகமாக வறுத்தெடுத்துள்ளார்.



 


அமெரிக்காவின் முதல் குடிமகளாக மிச்சேல் ஒபாமா இருந்தபோது பள்ளிக்குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அடிக்கடி நடத்தி வந்தார். மேலும் பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவில் எத்தனை கலோரிகள் இருக்கின்றன என்பதையும் அவர் கணக்கெடுத்த பின்னரே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.

ஆனால் டிரம்ப் அரசு நிர்வாகம் பொறுப்பெடுத்த பின்னர் பள்ளிக்குழந்தைகளின் உணவில் அக்கறை செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மிச்சேல், '''இங்குதான் நாம் அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு, இப்படிப்பட்ட முடிவுகள் ஏன் எடுக்கப்படுகின்றன என்பதைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். நம் குழந்தைகள் பள்ளிகளில் நல்ல உணவை சாப்பிட நீங்கள் விருப்பப்பட மாட்டீர்களா? இல்லையென்றால், உங்களுக்கு என்னதான் பிரச்னை? என்னை இந்த விஷயத்தில் இருந்து முற்றிலும் நீக்கிவிடுங்கள். ஆனால், ஒருவர் நம் குழந்தைகள் குப்பையைச் சாப்பிடுவதற்கு சம்மதம் என்று சொல்கிறார் என்றால், அதை நாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அதை எப்படி நாம் கொண்டாட முடியும்?' என்று சற்று காட்டமாகவே டிரம்ப் அரசை விமர்சித்தார்.