பாம்பின் உயிரை காக்க தனது உயிரை பணயம் வைத்த இளைஞர்!!
ஆஸ்திரேலியாவில் மலைப்பாம்பு சாலையை கடக்க இளைஞர் ஒருவர் சாலையின் குறுக்கே படுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேத்யூ என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சாலையில் பேசிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது சாலையில் நடுவே சுமார் 2.5 மீட்டர் நீளம் கொண்ட மலைப்பாம்பு இருந்துள்ளது.
அவ்வழியே செல்லும் வாகனங்கள் மலைப்பாம்பை மீது ஏறிவிடக்கூடாது என்பதற்காக மலைப்பாம்பின் அருகே படுத்துக்கொண்டு அது சாலையை கடக்கும் வரை அதற்கு அரணாக செயல்பட்டுள்ளார்.
மலைப்பாம்பு சாலையை கடக்க ஏறத்தாழ 5 நிமிடங்கள் ஆகியுள்ளது. இச்சம்பவத்தை அவரது நண்பர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.