1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: வெள்ளி, 26 ஆகஸ்ட் 2016 (16:40 IST)

20 மில்லியன் டாலர்களை பள்ளிக்கு நன்கொடை வழங்கிய உசைன் போல்ட்

உசைன் போல்ட் ஒலிம்பிக் போட்டியில் சம்பாதித்த 20 மில்லியன் டாலர்களை தான் படித்த பள்ளிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.


 


 
உலகின் அதிவேக ஓட்டபந்தய வீரர் என்று பெயர் பெற்ற உசைன் போல்ட், உலகளவில் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகிய ஓட்ட பந்தயங்களில் சாதனை படைத்துள்ளார்.   
 
அதோடு ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து மூன்றுமுறை தங்கம் வென்று, யாராலும் தோற்கடிக்க முடியாத வீரராக திகழ்ந்து வருகிறார்.
 
உலகளவில் உள்ள இளம் வயதினர், இவரை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு ஹீரோவாக கருதுகின்றனர்.
 
இந்நிலையில் உசைன் போல்ட் ஒலிம்பிக் போட்டியில் சம்பாதித்த 20 மில்லியன் டாலர்களை தான் படித்த பள்ளிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
 
நிதியில்லை என்று ஜமைக்கா அரசு விளையாட்டுத்துறைக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று குற்றச்சாட்டப்படும் நிலையில், அந்நாட்டு விளையாட்டுத்துறையை மீட்டெடுக்க தான் படித்த பள்ளிக்கு நிதி அளித்துள்ளார்.