ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 17 ஜூலை 2019 (15:56 IST)

ஃபெராரி கார் இவ்வளவுதானா? – வாயை பிளந்த வாடிக்கையாளர்களுக்கு விழுந்தது ஆப்பு

மெக்ஸிகோவில் ஃபெராரி, லம்போகினி போன்ற உயர் ரக கார்களை மிக குறைவான விலைக்கு விற்ற நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவில் இளைஞர்களால் மிகவும் விரும்பப்படுகிற, அதே நேரத்தில் சாதரன ஆட்களால் வாங்க முடியாத விலைக்கு விற்கப்படுபவை ஃபெராரி மற்றும் லம்போகினி நிறுவன கார்கள். அமெரிக்க இளைஞர்களுக்கே அது கனவு என்னும்போது மெக்ஸிகோவில் சொல்லவும் வேண்டுமா. மில்லியன்களில் விற்கப்படும் இந்த கார்களை தொட்டு பார்ப்பதே அதிசயம்.

அப்படிப்பட்ட கார்களை குறைவான விலைக்கு விற்றால் யார்தான் வாங்காமல் இருப்பார்கள். மெக்ஸிகோவில் க்ளாண்டஸ்டைன் பேக்டரி என்ற இடத்தில் குறைவான விலையில் (உண்மை விலையிலிருந்து 25%) ஃபெராரி, லம்போகினி ரக கார்களின் புதிய மாடல்கள் விற்கப்பட்டிருக்கின்றன. நிறைய பேர் அதை வாங்கி ஆசை ஆசையாய் ஓட்டி சென்றுள்ளனர். அதை தனது நண்பர்களிடம் காட்ட அவர்களும் ஆர்வமாய் அந்த கார்களை அந்த பேக்டரியில் இருந்து வாங்கியுள்ளனர்.

இந்நிலையில் இவ்வளவு குறைந்த விலையில் கார்கள் விறகப்படுவது தெரிந்த மெக்ஸிகன் போலீஸார் உடனடியாக அந்த பேக்டரியை சோதனையிட்டனர். அப்போதுதான் அந்த அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வந்தது. அந்த கார்கள் ஃபெராரி, லம்போகினி கார்களே இல்லை. மெக்கானிக்கான தந்தை, மகன் இரண்டு பேர் சேர்ந்து கார் பாகங்களை கொண்டு தாங்களாக உருவாக்கியது.

உண்மையான கார்களுக்கும், இவர்கள் உருவாக்கிய கார்களுக்கும் இடையே 10 சதவீதம்தான் வித்தியாசம் தெரியும் என்கிற அளவுக்கு பக்காவாக செய்திருக்கிறார்கள். அவர்களிடம் கார்கள் வாங்கிய யாருக்கும் இது உண்மையான ஃபெராரி இல்லை என்ற சந்தேகமே வரவில்லையாம். அவர்களை கைது செய்த போலீஸார் அங்கு கிட்டதட்ட முடிக்கப்பட்டிருந்த 8 போலி கார்களையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.