செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 10 செப்டம்பர் 2025 (09:15 IST)

இந்தியா மீது 100% வரி.. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அழுத்தம் கொடுத்த ட்ரம்ப்!

இந்தியா மீது 100% வரி..  ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அழுத்தம் கொடுத்த ட்ரம்ப்!
ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், அந்த நாட்டுடன் எண்ணெய் வர்த்தகம் செய்யும் இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு 100% வரி விதிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுத்ததாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடமிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
 
ஐரோப்பிய ஒன்றியம் இதை செயல்படுத்தினால், அதே நடவடிக்கையை அமெரிக்காவும் மேற்கொள்ளும் என டிரம்ப் உத்தரவாதம் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை, ரஷ்யாவின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இது ரஷ்யாவுடன் வர்த்தக உறவுகளை பேணும் நாடுகள் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என தெரிகிறது.
 
இந்தியாவை பொறுத்தவரை, ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்வது அதன் பொருளாதாரத்திற்கு அவசியமானதாக உள்ளது. டிரம்ப்பின் இந்த அழுத்தம், இந்தியாவுக்கு பொருளாதார ரீதியாக புதிய சவால்களை ஏற்படுத்தக்கூடும். ஆனால் இந்தியா இதை வெகு எளிதாக சமாளித்துவிடும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Siva