Last Modified: வியாழன், 15 அக்டோபர் 2015 (16:42 IST)
ஆடைகளை கழட்டி மாணவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியை
நெதர்லாந்தில் பள்ளி ஆசிரியை ஒருவர் தனது ஆடைகளை அவிழ்த்து வித்தியாசமான முறையில் பாடம் நடத்தியுள்ளார்.
நெதர்லாந்தில் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் ஆசிரியை டெபி ஹீர்கென்ஸ். இவர் தனது மாணவர்களுக்கு ஒரு நாள் உடற்கூறியல் பற்றி பாடம் நடத்த வேண்டியிருந்தது.
மாணவர்கள் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் பாடம் நடத்த முடிவு செய்தார். இதையடுத்து வகுப்பிற்கு வந்த அவர் டேபிள் மீது ஏறி நின்று தனது உடையை மாணவர்களுக்கு முன்பு அவிழ்த்தார். மாணவர்கள் அதிர்ச்சியாக பார்க்கும்போது,அவரது ஆடைக்குள் உடம்பை ஒட்டியபடி உடற்கூறுகைளை எடுத்துகாட்டும் வகையில் உடை அணிந்திருந்தார்.
ஆசிரியையின் இந்த வித்தியாசமான முயற்சியை பார்த்து மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதை வைத்து அந்த ஆசிரியை மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.
அந்த ஆசிரியரின் முயற்சியை அந்த பள்ளி நிர்வாகம் பாராட்டியுள்ளது.