1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (22:36 IST)

ஆப்கானிஸ்தானில் ஓட்டல்களுக்குச் செல்ல பெண்களுக்கு தடை -தாலிபான்கள் உத்தரவு

கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில், டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஜோ பைடனின் தேர்தல் வாக்குறுதியின்படி, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்டன.

இதையடுத்து, ஆப்கானிஸ்தான் நாட்டின் ஆட்சியதிகாரம் அனைத்தும் தாலிபான்கள் கையில் வந்தன.

ஏற்கனவே பழமைவிரும்பிகளான தாலிபான்கள் ஆட்சியில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதால், மக்கள் பெரும் பாதிப்பிற்குளாகி வருகின்றனர்.

அந்த வகையில், பெண்கள் கல்வி நிலையங்களுக்கும், வேலைக்குச் செல்லக்கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகளை சமீபத்தில் பிறப்பித்த நிலையில், என்.ஜி.ஓ போன்ற அமைப்புகளிலும் பணியாற்றக்கூடாது என்று எச்சரித்தனர்.

இந்த நிலையில், தற்போது, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண்கள் யாரும் ஐ.நா அமைப்பில் பணியாற்றக்கூடாது என்று தடை விதித்தனர்.

பழமைவாதிகளான தாலிபான்களின்  கட்டுப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதற்கு உலக நாடுகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் வடமேற்கு ஹெராத் மகாணத்தில், தோட்டங்கள் அல்லது  சாலையோர உணவகங்களுக்கு குடும்பங்கள் மற்றும் பெண்கள் செல்ல தடை விதித்து தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் அப்பகுதிகள் பெண்கள் சரியாக ஹிஜாப் அணியாததால் இத்தடை உத்தரவு போடப்பட்டுள்ளதாகவும், கூறப்பட்டுள்ளது.

இது ஆப்கானிஸ்தான் பெண்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உத்தரவு ஆண்களும் பெண்களும் சந்திக்கும் உணவகங்களுக்கு மட்டும் பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளனர்.