லீவுக்காக இப்டியெல்லாமா பண்றது! – ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 தடவை விவாகாரத்து!

Wedding
Prasanth Karthick| Last Modified வியாழன், 15 ஏப்ரல் 2021 (11:42 IST)
தைவான் நாட்டில் விடுமுறை பெறுவதற்காக வங்கி ஊழியர் ஒருவர் ஒரு பெண்ணை திரும்ப திரும்ப திருமணம் செய்து விவகாரத்து செய்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தைவான் நாட்டில் வங்கியில் பணிபுரியும் ஒருவர் தனது திருமணத்திற்காக 8 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறைக்கு விண்ணப்பித்துள்ளார். பின்னர் சில நாட்களில் அந்த பெண்ணை விவகாரத்து செய்து விட்டு மீண்டும் திருமணம் செய்ய 8 நாட்கள் விடுமுறைக்கு விண்ணப்பித்துள்ளார்.

இப்படியாக 37 நாட்களுக்கு 4 முறை திருமண விடுமுறைக்கு அவர் விண்ணப்பித்ததால் சந்தேகமடைந்து வங்கி நிர்வாகம் விசாரிக்கையில் அவர் சம்பளத்துடன் கூடிய விடுமுறைக்காக ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்துள்ளார் என தெரிய வந்துள்ளது.

இதை தொடர்ந்து அவரது சம்பளத்துடன் கூடிய விடுமுறை விண்ணப்பங்களை ரத்து செய்து அவரது மாத சம்பளத்தை பிடித்தம் செய்துள்ளதாம் வங்கி நிர்வாகம். தைவான் சட்டத்தை இப்படி நூதனமாக வங்கி ஊழியர் பயன்படுத்திய விதம் பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :