வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 7 மே 2017 (07:30 IST)

இடுப்பு சைஸ் குறைந்தால் 82,000 டாலர் அபராதம். அழகிகளுக்கு பிரான்ஸ் எச்சரிக்கை

இடுப்பின் அளவை குறைத்து இஞ்சி இடுப்பழகியாக மாறும் பெண்களுக்கு  82,000 டாலர் அபராதம் என பிரான்ஸ் நாடு எச்சரித்துள்ளதால் இளம்பெண்கள் குறிப்பாக ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொள்ளும் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



 


பிரான்ஸ் நாட்டில் உள்ள பெண்கள் பெரும்பாலானோர் தங்களின் உடலை ஒல்லியாக வைத்துக் கொள்வதற்காக, உணவு உண்பதை குறைத்து வருகின்றனர். இதனால் பல பெண்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இடுப்பழகை மெருகேற்ற சிகிச்சை எடுத்து கொண்ட சுமார் 40000 பெண்கள் பாதிப்பு அடைந்துள்ளதாக சமீபத்தில் தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரான்ஸ் அரசு இனிமேல் உயரத்திற்கு ஏற்ற எடை என்ற அளவை பெண்கள் மெயிண்டன் செய்ய வேண்டும் என்றும், உயரத்திற்கு ஏற்ற எடை இருக்கின்றது என்ற சான்றிதழ் பெற்றால் மட்டுமே ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொள்ள அனுமதி என்றும், இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு சுமார் 82,000 டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

ஏற்கனவே இதேபோன்ற ஒரு எச்சரிக்கையை இஸ்ரேல்,ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகள் தங்கள் நாட்டு பெண்களுக்கு விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.