செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Updated : திங்கள், 24 ஜூலை 2017 (14:08 IST)

அதிபர் டிரம்பிற்கு சூனியம் வைத்தேன் - பிரபல பாடகி பரபரப்பு பேட்டி

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு தான் சூனியம் வைத்ததாக, பிரபல பாடகி லானா டெல் ரே பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.


 

 
தற்போது அமெரிக்காவின் அதிபராக இருப்பவர் டிரம்ப். அவரின் நடவடிக்கைகளுக்கு பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காரணம், அவரது வலதுசாரி தாக்கம் உடைய சிந்தனைகளும், அமெரிக்காவை தவிர மற்ற நாட்டினர் மீது அவர் காட்டும் வெறுப்பு நடவடிக்கைகள் ஆகியவை ஆகும். இதனால் பல அமெரிக்க பிரபலங்கள் அவருக்கு எதிராகவே கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல பாப் பாடகியான லானா டெல் ரே சமீபத்தில் ஒரு பேட்டியளித்தார். அதில் அதிபர் டிம்பிற்கு தான் சூனியம் வைத்தகாக கூறிஅதிர்ச்சி கொடுத்தார். 
 
“அவருக்கு நான் சூனியம் வைத்தேன். ஏன் கூடாது?. இது போல நான் பல செயல்களை செய்துள்ளேன். என்னைப் பொறுத்தவரை நமது மனதில் எழும் எண்ணத்திற்கு ஒரு வலிமை இருப்பதாக நம்புகிறேன். நீங்கள் ஒன்றை நினைக்கும் போது உங்கள் எண்ணம் முதலில் வலிமையடையும். அதன் பின் அது வார்த்தைகளாக மாறும். அதன் பின் செயல்களாக மாறும். இறுதியில் நீங்கள் விரும்பும் படி அவை உடல்ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும்” என அவர் கூறினார்.
 
இவரின் பேட்டி அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.