வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (06:46 IST)

அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூரிலும் இந்திய ஐடி ஊழியர்களுக்கு சிக்கல்

சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய ஐடி ஊழியர்களுக்கு விசா வழங்குவதில் கடுமையான கெடுபிடி செய்ததால், இந்திய ஐடி ஊழியர்கள் பலர் அந்நாட்டில் இருந்து வெளியேறி வருகின்றனர். புதிய இந்திய ஐடி ஊழியர்களும் அமெரிக்காவுக்கு செல்வது குறைந்துள்ளது.



 


இந்த நிலையில் சிங்கப்பூர் அரசும் இந்திய ஐடி ஊழியர்களுக்கு கடுமையான சிக்கலை உண்டாக்கி வருகிறாது. கடந்த ஆண்டு முதலே இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பயிற்சிக்காக வரும் இந்திய ஐ.டி. ஊழியர்களுக்கு விசா வழங்குவதில் சிங்கப்பூர் அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வரத் தொடங்கியது.

இந்நிலையில் இந்தியாவின் பிரபல ஐ.டி. நிறுவனங்களில் இருந்து பயிற்சிக்காக சிங்கப்பூர் செல்லும் ஊழியர்களுக்கு சிங்கப்பூர் அரசு விசா வழங்க மறுத்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சாப்ட்வேர் மற்று பிபிஓ நிறுவனங்களின் ஊழியர்களுக்கு சமீபத்தில் விசா வழங்க சிங்கப்பூர் அரசாங்கம் மறுத்துவிட்டது.

அதுமட்டுமின்றி சிங்கப்பூரில் உள்ள ஐடி நிறுவனங்களுக்கு அரசு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் உங்களுடைய நிறுவனங்களில் பணி புரிவதற்கு சிங்கப்பூர்  ஊழியர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி இருக்கிறது. இந்த அறிக்கை இன்போசிஸ், விப்ரோ, காக்னிசான்ட், எல் அண்ட் டி இன்போடெக் போன்ற நிறுவனங்களுக்கும் தற்போது அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.