1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 20 மே 2017 (20:15 IST)

ஆப்கான் வங்கியில் துப்பாக்கி சூடு; கவலையளிக்கும் பலி எண்ணிக்கை

ஆப்கானிஸ்தான் வங்கி ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் பலர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


 

 
ஆப்கானிதான் கிழக்குப் பகுதியில் உள்ள பாக்தியா மாகாணத்தில் உள்ள வங்கி ஒன்றில் வாடிக்கையாளர்கள் பலர் உள்ளே இருந்த நேரத்தில் மர்ம கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. 
 
மர்ம கும்பல் திடீரென வங்கிக்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியதால், வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்கள் செய்வதறியாது அங்கும் இங்கும் ஓடியுள்ளனர். உடனே இதுகுறித்து தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் வங்கியை சுற்றி வளைத்தனர்.
 
மர்ம கும்பல் நடத்திய தாக்குதலில் பலர் பலியாகி இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தாக்குதல் நடத்திய 3 மர்ம நபர்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
மேலும் இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. இந்த தாக்குதல் குறித்த காரணங்கள் மற்றும் தாக்குதல் நடத்தியர்கள் குறித்த எந்த தகவல்களும் கிடைக்கவில்லை.