திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 28 ஜனவரி 2020 (07:38 IST)

ஒன்பதாவது மாடியில் இருந்து விழுந்து அசால்ட்டாக எழுந்து சென்ற பெண்: வேற்றுக் கிரகவாசியா?

ரஷ்யாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 29 வயது பெண் ஒருவர் திடீரென ஒன்பதாவது மாடியில் இருந்து குதித்தார். பின்னர் அவருக்கு எதுவுமே நடக்காதது போல சாதாரணமாக எழுந்து நடந்து சென்றது சிசிடிவி வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது
 
இந்த வீடியோவை இங்கிலாந்தைச் சேர்ந்த ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ வெளியான அடுத்த சில நிமிடங்களில் மில்லியன் கணக்கானோர் இந்த வீடியோவை பார்த்து கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்
 
ஒன்பதாவது மாடியில் இருந்து குதித்து எந்தவித பதட்டமும் இல்லாமல் அவர் எழுந்து சென்றதை பார்க்கும்போது அவர் வேற்றுகிரக பெண்ணாக இருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது என பெரும்பாலான சமூக வலைதள பயனாளிகள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் அவர் விழுந்த இடத்தில் பனி அதிகமாக இருப்பதாகவும் அதனால் அவருக்கு காயம் ஏற்படவில்லை என்றும் இந்த வீடியோவை யாரும் பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் சிலர் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது