கைது செய்ய வந்த போலீசாருக்கு வெள்ளை ரோஜா கொடுத்த வெனிசுலா இளம்பெண்கள்
வெனிசுலா நாட்டின் இளம்பெண்கள் நேற்று ஒரு போராட்டத்தை நடத்தியபோது அவர்கள் தங்களை கைது செய்ய வந்த போலீசாருக்கு காதலின் சின்னமான வெள்ளை ரோஜாவை கொடுத்ததால், கைது செய்யவும் முடியாமல் போராட்டத்தை அனுமதிக்கவும் முடியாமல் அந்நாட்டு போலீசார் திணறினர்
கடந்த சில ஆண்டுகளாகவே வெனிசுலா நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தில் சென்று கொண்டிருப்பதால், நாட்டின் பொருளாதாரத்தை சரிசெய்யவும், புதிய அதிபர் தேர்தல் நடத்தவும் நேற்று வெனிசுலா நாட்டில் வெந்நிற உடைகளுடன் கைகளை ரோஜா பூக்களை ஏந்தி வெனிசுலா நாட்டுப் பெண்கள் நேற்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டன
நாட்டின் முக்கிய நகரங்களில் நேற்று நடந்த இந்த போராட்டத்தின்போது வெனிசுலா தேசிய கீதத்தை பாடியவாறு ஊர்வலமாக சென்ற பெண்களை தடுக்க முயன்றனர். ஆனால் தங்களை தடுக்க முயன்ற் பாதுகாப்பு படையினருக்கு காதலின் சின்னமான ரோஜாப் பூக்களை இளம்பெண்கள் புன்னகையுடன் தந்தனர்.
இதனால் அவர்களை கைது செய்யவும் முடியாமல், தடுத்து நிறுத்தவும் இயலாமல் பாதுகாப்பு படையினர் அசடு வழியும் காட்சிகள் பிரபல ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பாகியது.