அமெரிக்க தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்ட ரஷ்ய அதிபர்
ரஷ்யாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் 755 பேர் உடனே நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
உலக நாடுகளில் அமெரிக்கா - ரஷ்யா நாடுகள் இடையே பனிப்போர் தொடர்ந்து நிலவி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைப்பெற்ற அதிபர் தேர்தலில் ரஷ்யா நேரடியாக தலையிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து ரஷ்யா தனது நாட்டின் ரூபாய் மதிப்பை அமெரிக்க டாலருக்கு எதிராக உயர்த்தியுள்ளது. இதனால் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்துள்ளது.
இதை கருத்தில் கொண்டு அமெரிக்க ரஷ்யா மீது பொருளாதார தடை விதிப்பதற்கான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அதிபர் டிரம்பின் கையெழுத்திற்காக அனுபப்பட்டுள்ளது. இதனால் ரஷ்ய அமெரிக்கா மீது கோபத்தில் உள்ளது.
இந்நிலையில் ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் புதின் அமெரிக்காவுடன் உடனே உறவு மேம்பட வாய்ப்பில்லை. ரஷ்யாவில் இருக்கும் 755 அமெரிக்க தூதரக அதிகாரிகள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ரஷ்யாவில் சுமார் 1000-க்கும் அதிகமான அமெரிக்க தூதரக அதிகாரிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.