பெண்ணை உண்ட பன்றிகள்: ரஷ்யாவில் பரிதாபம்

Last Updated: வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (17:49 IST)
தங்களின் இருப்பிடத்தில் தவறுதலாக விழுந்துவிட்ட ஒரு 56 வயதான பெண்ணை பன்றிகள் சாப்பிட்டு விட்டதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 
உட்மர்ட்டியா என்ற மத்திய ரஷ்யப் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் விலங்குகளுக்கு உணவளிக்க தனது வீட்டை விட்டு வெளியே வந்த விவசாயியான அப்பெண்ணுக்கு, வலிப்பு நோய் வந்திருக்கலாம் அல்லது அவர் மயக்கமடைந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
 
இறந்த பெண்ணின் உடலை அவரது கணவர் பின்னர் கண்டறிந்துள்ளார். அதிக அளவிலான ரத்த இழப்பினால் அவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. 
 
இப்பெண்ணின் கணவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், சம்பவம் நடந்ததற்கு முந்தைய நாளில் வெகு முன்னதாகவே உறங்கியுள்ளார்.
 
பின்னர் காலையில் விழித்த அவர் தனது மனைவியை வீட்டில் காணவில்லை என்பதால் தேடியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதில் மேலும் படிக்கவும் :