1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 27 ஜூலை 2017 (12:36 IST)

16 வயது சிறுமியை கற்பழிக்க உத்தரவிட்ட பஞ்சாயத்து

பாகிஸ்தானின் பஞ்சாயத்து தீப்பினை அடுத்து 16 வயது சிறுமி குடுமபத்தினர் முன்னிலையில் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பாகிஸ்தானின் குஜாபராபாத் நகரில் உள்ள ராஜ்பூர் என்ற கிராமத்தில் வசிக்கும் உமர் என்பவர் கடந்த 16ஆம் தேதி அஷ்பக் என்பவரின் சகோதரியை கற்பழித்துள்ளார். இந்த வழக்கு கிராம பஞ்சாயத்திற்கு சென்றுள்ளது. இதையடுத்து பஞ்சாயத்தில் உமரின் சகோதரியை கற்பழிக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர். 
 
கடந்த 2 நாட்களுக்கு முன் இதுகுறித்து உமர் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து கிராம் பஞ்சாயத்து உறுப்பினர்கள் 30 பேர், அஷ்பக் மற்றும் உமர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
கற்பழிப்பு உத்தரவு பிறப்பித்த கிராம பஞ்சாயத்து தலைவர் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு எதிராக பெண்கள் உரிமை அமைப்பை சேர்ந்த பலரும் குரல் கொடுத்துள்ளனர்.