பிரபல பாடகர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை
பாகிஸ்தானின் சிறந்த சூஃபி இசை பாடகர்களில் ஒருவரான அம்ஜத் சப்ரி, கராச்சியில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஆனால், இந்த பாடல்கள் சன்னி இனத்தவருக்கு எரிச்சலை கிளப்பியது.
சூஃபியிஸத்துடன் தொடர்புடைய இசைகள் மத நிந்தனை செய்யும் இசையாக சன்னி தீவிரவாதிகள் கருதி வருகின்றனர்.
அம்ஜத் சப்ரி அடுத்த சில நாட்களில் பல நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்துவதாக இருந்தது. இந்நிலையில், தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள பரபரப்பான பகுதியில் காரில் பயணித்து கொண்டிருக்கும் போது, மர்ம நபர்கள் இருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.
ஆனால், மருத்துவமனை செல்லும் வழியில், அவர் உயிரிழந்துள்ளார். கடந்த சில வருடங்களாக, பாகிஸ்தானில் உள்ள சில சூஃபி வழிபாட்டு தலங்களை தற்கொலைப்படையினர் தாக்கி வருகின்றனர்.
அஜ்மத் சப்ரி 17ஆம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட முகலாய சாம்ராஜ்யத்தின் இசை பாரம்பரிய குடும்பத்தோடு தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.