வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 24 நவம்பர் 2023 (20:25 IST)

'இன்ஸ்டாகிராமில் 'டவுன்லோட் செய்யும் புதிய வசதி! மெட்டா தகவல்

இந்த உலகில் பல புதிய புதிய செயலிகள்,சமூக வலைதளங்கள், தொழில் நுட்பங்கள், ஏஐ தொழில் நுட்பங்கள் என கண்டறியப்பட்டுக் கொண்டே வருகிறது.

இவை எத்தனை அறிமுகமாயினும் மக்கள் அனைவரும் அதை உடனே பயன்படுத்திப் பார்க்கும்  வகையில் புதிய  ஸ்மார்ட் செல்போன்களும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், உலகில் உள்ள பல கோடி மக்களின் சிறந்த பொழுதுபோக்கு வலைதளமாக இருப்பது இன்ஸ்டாகிராம்.  இதை நிர்வகித்து வரும் மெட்டா பல புதிய அப்டேட்களை அறிமுகம் செய்து வருகிறது.

அதன்படி, இன்ஸ்டாகிராமில் உள்ள பப்ளிக் கணக்குகளில் இருந்து டவுன்லோட் செய்யும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ள மெட்டா.

ஆனால், இதை டவுன்லோடு செய்யும்போது, பதிவிட்டவரின் ஐடி வாட்டர்மார்க்காக இருக்கும் என பப்ளிக் கணக்கு வைத்திருப்பவர் வேண்டுமானால் இதை ஆப் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.