ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 7 ஜூன் 2017 (19:31 IST)

வங்கக்கடலில் விழுந்து நொறுங்கிய ராணுவ விமானம்

மியன்மரில் 116 பேருடன் சென்ற ராணுவ விமானம் திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டு இன்று பிற்பகல் மாயமானது. இந்நிலையில் தற்போது அந்த விமானம் வங்கக்கடலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


 

 
 
மியான்மர் நாட்டிற்கு சொந்தமான ராணுவ விமானம் 116 பேருடன் யாங்கோன் நோக்கி சென்று கொண்டிருந்தது. இன்று பிற்பகல் மேக் மற்றும் யாங்கோனுக்கு இடையே சென்றபோது விமானம் ரேடர் சிக்னலில் இருந்து மறைந்தது. காணாமல் போன விமானத்தில் 105 பயணிகளும், 11 விமான ஊழியர்களும் பயணித்துள்ளனர். 
 
தற்போது விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைப்பெற்று வந்தது. இந்நிலையில் தற்போது வங்கக்கடலில் மியான்மர் ராணுவ விமானத்தின் பாகங்கள் கண்டறிப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், விமானத்தில் பயணம் செய்த 116 பேர் குறித்து எந்த தகவலும் இல்லை.