1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 14 செப்டம்பர் 2016 (16:20 IST)

இனி பெண்கள் இன்றி ஆண்களும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்: ஆய்வில் அதிசய தகவல்

பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் தோல் செல்கள் மூலம் குழந்தை பெறலாம் என்ற அதிசய தகவல் வெளியாகி உள்ளது.


 
 
இனி பெண்கள் இன்றி ஆண்களும் நவீன முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என புதிய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
 
அதன்படி ஆணின் உயிரணுவுடன் மற்றொரு ஆணின் தோல் செல்கள் அல்லது மற்ற திசுக்கள் கலக்கப்படுகிறது. அதன்மூலம் குழந்தை உருவாகிறது. ஆணுக்கு ஆண் மூலமே குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த முறை ஓரின சேர்க்கையாளர்களுக்கு மிக வசதியாக அமையும். 
 
அதே நேரத்தில் பெண்களும் தங்கள் குழந்தைகளை பெற முடியும். புற்றுநோய் மருந்துகள் அல்லது மற்ற நோய் தாக்கத்தால் குழந்தை பெற முடியாத பெண்கள் அவர்களது உறைய வைக்கப்பட்ட கருமுட்டைகளில் மற்றவர்களின் தோல் செல்கள் மூலம் குழந்தை பெற முடியும்.
 
இதற்கு முன்னோடியாக இத்தகைய ஆய்வு சுண்டெலிகளில் மேற்கொள்ளப்பட்டு வெற்றி பெற்றுள்ளது. எனவே, இதை மனிதர்களுக்கும் விரைவில் பயன்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.