17 பில்லியன் சூரியன்கள் கண்டுப்பிடிப்பு நாசா தகவல்
17 பில்லியன் சூரியன்களை கொண்ட மிகப் பெரிய பிலாக் ஹோல் நாசா விண்வெளி அறிஞர்களால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
பிரபஞ்சத்தின் மைய பகுதியாக கருத்தப்படும் அடர்த்தி குறைவான இடத்தில் பெரும் அளவில் உள்ள பிலாக் ஹோல் என்று அழைக்கப்படும் கருப்பு துளை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
ஹவாய் உள்ள நாசாவின் ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் மற்றும் ஜெமினி தொலைநோக்கி மூலம், இந்த அரிய கருப்பு துளையை நாசா விண்வெளி அறிஞர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
இதுவரை கண்டு பிடித்த கருப்பு துளைகளிலே மிகப்பெரிய கருப்பு துளை கிட்டத்தட்ட 10 பில்லியன் மடங்கு சூரியன்களை கொண்டதாக இருப்பதாகவும், பிற விண்மீன் திரள்கள் நிரம்பிய பிரபஞ்சத்தின் பகுதிகளில் மிக பெரிய விண்மீன் திரள்கள் காணப்பட்டுள்ளதாகவும், நாசா விண்வெளி அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது உள்ள பூமி, செவ்வாய் போன்ற பெரிய கிரகங்களை விட அந்த கருப்பு துளைகளில் உள்ள கிரகங்கள் அனைத்தும் பெரிதாக உள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.