1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 17 ஏப்ரல் 2017 (21:53 IST)

ஒரே நாளில் 1100 பேர் உடலுறவு கொள்ள அழைப்பு. ஆப் செய்த ஆபத்தான விளைவு

ஸ்மார்ட்போன்கள் இருந்தாலே ஆப்ஸ்கள் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆப்ஸ்கள் இல்லாமல் போன் இல்லை, போன் இல்லாமல் ஆப்ஸ்கள் இல்லை.



 


இந்த நிலையில் ஏராளமான டேட்டிங் ஆப்ஸ்கள் புற்றீசல் போல் பரவி சமூக சீரழிவை ஏற்படுத்தி வருகிறது. இது போதாதென்று ஓரினச்சேர்க்கைக்கும் தற்போது தனி ஆப்ஸ்கள் வந்துவிட்டது. அவற்றில் ஒன்றுதான் கிரிண்டர் ஆப் ஆகும்.

இந்த ஆப் முலம் சமீபத்தில் மாத்தீவ் கெரிக் என்ற 32 வயது நபர் ஒருவருக்கு ஆண் சேர்க்கையாளர் கிடைத்துள்ளார். அவருடனான உறவு ஒருசில மாதங்களே நீடித்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.

ஆனால் இந்த புதிய உறவால் ஆத்திரம் அடைந்த கெரிக்கின் முன்னாள் ஓரினச்சேர்க்கையாளர் அவரை பழிவாங்கும் நோக்கத்துடன் கெரிக்கின் முகவரி, போன் நம்பர், உள்பட அனைத்து விஷயங்களையும் கிரிண்டர் ஆப்பில் பதிவு செய்துவிட்டார். இதனை பார்த்த பலர் கெரிக்கை உடலுறவுக்கு அழைத்துள்ளனர். அதிகபட்சமான கடந்த வாரத்தில் ஒருநாள் சுமார் 1100 பேர் உடலுறவுக்கு அழைப்புவிடுத்துள்ளனர். இதனால் கெரிக் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.