வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 20 பிப்ரவரி 2017 (17:09 IST)

ஓரே நாளில் 27 முறை மாரடைப்பு: உயிர் பிழைத்த அதிசய மனிதர்

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு தொடர்ந்து ஒரே நாளில் 27 முறை மாரடைப்பு ஏற்பட்டும், உயிர் பிழைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
 
இங்கிலாந்து வெட்னஸ்பெரி பகுதியைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர் ராய்வுட்கால்(54) மைதானத்தில் கால்பந்து போட்டி விளையாடி கொண்டிருக்கும்போது நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
 
விளையாட்டை பார்த்துக் கொண்டிருந்த மருத்துவர் உனடனடியாக வந்து அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தார். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் பரிசோதனை தொடங்கும் முன்பே இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
 
அடுத்த நாள் மதியம் மீண்டும் அவருக்கு 27 முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இது மருத்துவமனையில் சேர்ந்த பின் 24 மணி நேர இடைவெளியில் ஏற்பட்டது என கூறப்படுகிறது.
 
தற்போது சிகிச்சை முடிந்து ஓய்வு எடுத்து வரும் ராய்வுட்கால், தன்னால் கால்பந்து விளையாட முடியவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்.