1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 17 மே 2022 (13:48 IST)

திரிகோணமலையில் இருந்து இடம் மாற்றப்பட்டாரா ராஜபக்சே?

Mahinda
திரிகோணமலையில் உள்ள கடற்படை முகாமில் மகிந்த ராஜபக்சே இரகசியமாக தங்க வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அவர் இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது
 
இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் வீதியில் இறங்கி போராடினர்.  அதனால் பிரதமர் பதவியில் இருந்த மகிந்த ராஜபக்ச சமீபத்தில் பதவி விலகினார் 
 
இதனை அடுத்து அவர் போராட்டக்காரர்களுக்கு பயந்து திருகோணமலை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது திரிகோணமலையில் இருந்து கொழும்புவில் உள்ள ரகசிய இடத்திற்கு மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது
 
கூடுதல் பாதுகாப்பை கருதி அவர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது