திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : சனி, 30 ஜனவரி 2016 (18:17 IST)

ராஜபக்சேவின் மகன் யோஷித்த ராஜபக்சே கைது

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் மகன் யோஷித்த ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார்.


 

 
நிதி மோசடிகள் தொடர்பான சிறப்பு காவல்துறை பிரிவினர் கொழும்பிலுள்ள கடற்படைத் தலைமையகத்தில் யோஷித்த ராஜபக்சேவிடம் விசாரணை நடத்திவந்தனர்.
 
ராஜபக்சேவின் ஆட்சிக் காலத்தில்  சிஎஸ்என் ஊடக நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் நிதி மோசடி  நடந்ததாகக் கூறப்படுவிறது.
 
இந்நிலையில், கைது செய்யப்பட்ட யோஷித்த ராஜபக்சே கடுவலை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் யோஷித்த ராஜபக்சே கடற்படை அதிகாரியாக நியமனம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.