ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 11 ஏப்ரல் 2020 (12:21 IST)

இறைச்சி பட்டியலில் சேரும் விலங்குகள் எவை? சீனா தயாரித்த புது லிஸ்ட்!

சீனாவில் இனி எந்தெந்த விலங்குகள் இறைச்சிக்காக வளர்க்கப்படலாம் என பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது அந்நாட்டு அரசு. 
 
கொரோனா வைரஸ் இறைச்சிகளை உண்டு பரவியதாக நம்பப்படும் நிலையில் சீனா எந்த விலங்குகளை இறைச்சிக்கு வளர்க்கலாம் என்ற வரைவு பட்டியலை வெளியிட்டுள்ளது. 
 
இறைச்சிக்கு பன்றிகள், பசுக்கள், கோழிகள், ஆடுகள், மான்கள், தீக்கோழிகள், ஒட்டக இன அல்பாகா ஆகியவற்றை வளர்க்கலாம். நரி, கீரி, காட்டு எலி ஆகியவற்றை வளர்க்கலாம் ஆனால் அதனை இறைச்சியாக பயன்படுத்த கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பரவலுக்கு காரணமாக பார்க்கப்படும் எறும்பு திண்ணி மற்றும் வவ்வால்களுக்கு இந்த பட்டியலில் இடமில்லை. அதேபோல நாய்களுக்கும் இடமில்லை. பூனைகள் குறித்த எந்த தகவலும் இல்லை.