1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: திங்கள், 30 ஜனவரி 2017 (17:21 IST)

குடும்பத்தினர் கண் முன்னாலேயே கணவரை புலிகள் கொன்ற சம்பவம் - அதிர்ச்சி வீடியோ

சீனாவில் ஒரு உயிரியல் பூங்காவிற்கு பார்வையிட சென்ற ஒருவரை புலிகள் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சீனாவில் ஷாங்காயின் தென் பகுதியில் இருக்கும் நிங்போ எனும் உயிரியல் பூங்காவிற்கு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்ற ஒருவரை சில புலிகள் திடீரென தாக்கி இழுத்துச் சென்றது. இதைக் கண்ட பார்வையாளர்கள் அவசர அலாரத்தை அடித்தனர்.
 
உடனடியாக அங்கு விரைந்த பூங்கா காவலர்கள், பட்டாசுகளை கொழுத்தியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் அந்த புலிகளை விரட்டினர். ஆனால், அந்த புலிகள் அவரை கடித்துக் குதறியதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்டு, அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்த பூங்கா மூடப்பட்டது.